புடினுக்கு ரகசியமாக 2 மகன்கள்! பிரசவம் பார்த்த மருத்துவர் அதிர்ச்சி தகவல்


ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு ரகசியமாக 2 மகன்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விளாடிமிர் புடினுக்கு அவரது ஜிம்னாஸ்ட் காதலி அலினா கபேவா மூலம் இரண்டு ரகசிய மகன்கள் இருப்பதாக ஒரு புதிய அறிக்கை தெரிவிக்கிறது.

முதல் ஆண் குழந்தை 2015-ஆம் ஆண்டு பெரும் பாதுகாப்புக்கு மத்தியில் சுவிட்சர்லாந்தில் ரகசியமாக பிறந்ததாக அவருக்கு பிரசவம் பார்த்த மகப்பேறு மருத்துவர் கூறியுள்ளார்.

இரண்டாவது மகன் 2019-ல் மாஸ்கோவில் பிறந்தாகவும், அதே ம்ருத்துவர் ரஷ்யாவிற்கு சென்று பிரசவம் பார்த்ததாக சுவிஸ் பிராட்ஷீட் செய்தித்தாள் Sonntagszeitung-ன் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடது கையை மட்டும் வீசி வித்தியாசமாக நடக்கும் புடின்! நோய் தான் காரணமா? 

இந்த ஆண்டு 70 வயதாக இருக்கும் ஜனாதிபதி விளாடிமிர் புடின், 2007-ல் முதல் கபேவாவுடனான உறவை மறுத்தார். ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற அலினா கபேவாவுக்கு இப்போது 38 வயதாகிறது.

இப்போது பேலியாகியுள்ள தகவலின்படி, அவர் தனது ரகசியக் குடும்பத்தை மக்களிடம் இருந்து மறைத்துவிட்டார் என்றும் மேலும் இரண்டு குழந்தைகள் பிறப்புகளிலும் அவர் இல்லை என்று கூறப்படுகிறது.

2019-ல் இரட்டைக் குழந்தைகள் பிறந்ததாகவும் சில கருத்துக்கள் இருந்தாலும், நிச்சயம் அதில் ஒருவர் ஆண் குழந்தை என்பதும், புடின்-கபேவா குடும்பம் பற்றிய வலுவான வதந்திகளை இந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது.

உக்ரைனுடனான போரினால் நாடு பெரும் இழப்புகளைச் சந்திக்கும் நேரத்தில் கபீவா இரகசிய ரஷ்ய முதல் பெண்மணி என்பதையும் இந்த தகவல் குறிக்கிறது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.