புதுச்சேரியில் ஓய்வுபெற்ற தமிழ் பேராசிரியர் ஒருவர், தனது வீட்டில் உள்ள அனைத்து கதவுகள் மற்றும் ஜன்னல்களில் தமிழ் நூல்களின் வரிகளையும், கவிஞர்களின் படங்களையும் செதுக்கி வைத்துள்ளார்.
புதுச்சேரி காஞ்சிமாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மையத்தின் ஓய்வு பெற்ற தமிழ்த்துறை தலைவர் முனைவர். அவ்வை நிர்மலா. இவர் லாஸ்பேட் பகுதியில் வசித்து வருகிறார், தனது வீடு முழுவதும் உள்ள கதவுகள் மற்றும் ஜன்னல் கதவுகளில் தமிழ் நூல்களின் வரிகளை அச்சிட்டு உருவாக்கியுள்ளார்.
தனது வீட்டின் வாயில் கதவை திருக்குறள், தொல். காப்பியம், கம்பராமாயணம், பாரதிதாசன், பாரதியார் எழுதிய நூல்களின் வரிகளை கொண்டு உருவாக்கி உள்ளார். அதேபோல் வீட்டின் மற்றொரு கதவில் தொல்காப்பியர், அவ்வையார், திருவள்ளூர், இளங்கோ அடிகள், பாரதியார், பாரதிதாசன் ஆகியோரின் உருவங்களை கொண்டு உருவாக்கியுள்ளார்.
மேலும் வீட்டின் அனைத்து ஜன்னல், மற்றும் கதவுகளிலும் தமிழ் நூல்களின் வரிகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது, முனைவர் அவ்வை நிர்மலாவின் இச்செயல் புதுச்சேரியில் உள்ள பல்வேறு தரப்பு மக்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பாராட்டப்பட்டு வருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM