மகாராஷ்டிரா உருவான தினத்தை முன்னிட்டு மும்பை தலைமைச் செயலகமான மந்த்ராலயா மற்றும் பிர்ஹன்மும்பை முனிசிபல் கார்பரேஷன் உள்ளிட்ட கட்டிடங்கள் மூவர்ண நிறத்தில் ஒளியூட்டப்பட்டுள்ளன.
1960ஆம் ஆண்டு மே 1ந்தேதி மகாராஷ்டிரா மாநிலம் உருவாக்கப்பட்டது. இதையொட்டி சிவாஜி பார்க்கில் கொண்டாடப்பட உள்ள நிகழ்ச்சியில் மாநில ஆளுநர், முதலமைச்சர் உத்தவ்தாக்கரே உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.