மறைந்த நடிகர் விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரின் பெயரை சூட்டுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த விவேக் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி உயிரிழந்தார்.
சமீபத்தில் விவேக்கின் மனைவி அருட்செல்வி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்தார்.
அப்போது நடிகர் விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரை சூட்ட முதல்வர் மு.க.ஸ்டாலிடம் கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில் விவேக் வசித்த பகுதிக்கு சூட்ட வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர்
உடனடியாக அரசாணை பிறப்பித்துள்ளதாக அமைச்சர் மா. சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
வரும் 3ம் திகதி அதன் பெயர் பலகை திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது என அவர் கூறியுள்ளார்.