புனே:
ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர் தோல்வியை சந்தித்த நிலையில், மீண்டும் கேப்டன் பொறுப்பு டோனி வசம் வந்துள்ளது. சென்னை அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பிராவோ மற்றும் சிவம் ஆகியோருக்கு பதில் கான்வே, சிமர்ஜீத் சிங் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர். ஐதராபாத் அணியில் மாற்றம் எதுவும் இல்லை.