கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த, பிரதமர் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கோவிட் – 19 எனப்படும் கொரோனா தொற்று பரவியது. இந்தத் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும் அது பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து வருகிறது. இந்நிலையில், சீனா, ஆஸ்திரியா,
நெதர்லாந்து
உள்ளிட்ட ஒருசில நாடுகளில், தற்போது, கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது.
இந்நிலையில், ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில், கடந்த சில நாட்களாக, கொரோனா தினசரி பாதிப்பு ஏற்ற – இறக்கமாகவே காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில், சுமார் 1,679 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அதற்கு முந்தைய நாள், 1,245 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், தற்போது, தினசரி பாதிப்பு, 1,679 ஆக அதிகரித்துள்ளது.
சினிமா பாணியில் உக்ரைன் அதிபரை கொல்ல முயற்சி: அதிர்ச்சி தகவல்!
இதற்கிடையே, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, மீண்டும் ஊரடங்கில் கட்டுப்பாடுகள் அமலாக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. கொரோனா தினசரி பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், கட்டுப்பாடுகள் அமலாக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, குளிர் காலத்தில் சுமார் 1 கோடி பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படக் கூடிய அபாயம் இருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் எர்ன்ஸ்ட் குய்ப்பர்ஸ் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.