IPL 2022 CSK vs SRH; Chennai Super kings wants revival against Sun Risers Hyderabad: தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் சிஎஸ்கே அணியும், தொடர்ந்து 5 வெற்றிகளுக்குப் பிறகு ஒரு தோல்வியைச் சந்திந்த ஹைதராபாத் அணியும் இன்று களமிறங்குவதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோற்கவில்லை என்பது இல்லை, உண்மையில் அவர்கள் இரண்டு தோல்விகளுடன் தொடங்கியுள்ளனர், ஆனால் இதுவரை ஏற்பட்ட மூன்று தோல்விகளில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான தோல்வி ஹைதராபாத் அணியை கடுமையாக பாதித்துள்ளது. ஏனெனில், ரஷித் கானுக்கு எதிராக கடைசி ஓவரில் 22 ரன்களைக் காக்கத் தவறிய மார்கோ ஜான்சனின் மோசமான பந்து வீச்சு, SRH மீண்டும் தோல்வி பாதைக்கு திரும்பியுள்ளதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
முன்னதாக ஐபிஎல்லின் தொடக்கத்தில் தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்வியடைந்த பிறகு, புனேவில் உள்ள MCA ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ஹைதராபாத் அணி வெற்றி பாதைக்கு திரும்பியது. அதன் பின் தொடர்ச்சியாக அந்த அணி 5 வெற்றிகளைப் பெற்றது. இந்தநிலையில், குஜராத் அணிக்கு எதிரான மோசமான தோல்வியால், அந்த அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்புடன் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கும்.
இதையும் படியுங்கள்: தொடர் தோல்வி… சி.எஸ்.கே கேப்டன் பதவியை தோனியிடம் ஒப்படைத்த ஜடேஜா!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான ஃபார்ம் மற்றும் முக்கிய வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் காரணமாக தடுமாறி வருகிறது. மேலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான 23 ரன்கள் வித்தியாசத்திலும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 3 விக்கெட் வித்தியாசத்திலும் மட்டுமே வெற்றி பெற்று, தனது பழைய ஆட்டத்திறனை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வருகிறது.
சென்னை அணி இதுவரை விளையாடியுள்ள 8 ஆட்டங்களில் 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம் ஹைதராபாத் அணி 8 ஆட்டங்களில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 4 ஆம் இடத்தில் உள்ளது.