இன்று விடுமுறை தினம் என்பதால் டாஸ்மாக்கில் தமிழகத்தில் நேற்று ஒருநாள் மட்டும் 252 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மே ஒன்றாம் தேதி உழைப்பாளர் தினத்தையொட்டி இன்று டாஸ்மாக் கடைகளுக்கு தமிழகத்தில் விடுமுறை என்பதால் நேற்று கடைகளில் மது பாட்டில்களை வாங்க கூட்டம் அலைமோதியது. இதனால் நேற்று ஒரே நாளில் 252 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன.
இதில் அதிகபட்சமாக மதுரையில் 54 கோடியே 89 லட்சம் ரூபாய்க்கும், சென்னையில் 52 கோடியே 28 லட்சம் ரூபாய்க்கும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன. திருச்சியில் 49 கோடியே 78 லட்சம் ரூபாயும், சேலத்தில் 48 கோடியே 67 லட்சம் ரூபாயும், கோவையில் 46 கோடியே 72 லட்சம் ரூபாயும் டாஸ்மாக் கடைகளில் விற்பனை நடந்துள்ளது.
பொதுவாகவே டாஸ்மாக் விடுமுறை தினம் என்றால் அதற்கு முதல் நாளில் விற்பனை அதிகரிப்பது வழக்கம். இதுபோலவே தீபாவளி, பொங்கல், புத்தாண்டு பண்டிகைகளின் போதும் அதிகளவில் டாஸ்மாக் விற்பனை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: நீலகிரி: 11ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர் போக்சோவில் கைது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM