இலங்கையைப் பொறுத்தமட்டில் தற்போது பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளது.
இதன் காரணமாக பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இலங்கையில் உள்ள வசதிப் படைத்தவர்களே தற்போதைய சூழல் திக்குமுக்காடிப் போயிருக்கும் நிலையில் சாதாரண மக்கள் நிலை மிக அவல நிலைக்குரியது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் கடந்த பல வருடங்களாக தமது உறவுகளைத் தொலைத்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வடக்கு – கிழக்கு தாய்மார்களின் நிலையும் மிகவும் வேதனைக்குரியதாகவே மாறியிருக்கின்றது.
தற்போதைய இக்கட்டான நிலையில் தமது வாழ்வாதாரத்தையும் கொண்டு செல்ல போராடி வருவதுடன் உறவுகளைத் தேடிய போராட்டத்தையும் தொடர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் அவர்கள் அனுபவிக்கும் பல இக்கட்டான நிலையை எமது ஊடறுப்பு நிகழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கின்றார் வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பின் செயலாளர் லீலாவதி,