ரஷ்ட படைகளின் தொடர் தாக்குதலால், உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் உருக்கிலைந்து இருப்பதை காட்டும் செயற்கைக் கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
மாக்ஸார் டெக்னாலஜிஸ் என்னும் அமெரிக்க விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் சேகரித்த இந்த செயற்கைக்கோள் புகைப்படங்கள், பல்பொருள் அங்காடிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதையும் சேதமடைந்த கட்டிடங்களுக்கு இடையே மக்கள் திரண்டிருப்பதையும் காட்டுகின்றன.
மரியுபோல் நகர் மீது தொடர் தாக்குதலை நடத்திய ரஷ்யா, கடந்த வாரம் அந்நகரை கைப்பற்றிவிட்டதாக அறிவித்தது. அங்குள்ள அசோவ்ஸ்டல் எஃகு தொழிற்சாலையையும் ரஷ்ய படைகள் தாக்கிய நிலையில், அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
அவர்களை மீட்பதற்கான பேச்சுவாரத்தை நடைபெற்று வருவதாக ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்திருக்கிறார்.