புதுடெல்லி: ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் எம்.எம்.நரவானே நேற்று ஓய்வு பெற்றார். இதை யடுத்து 29-வது ராணுவத் தலைமை தளபதியாக ஜெனரல் மனோஜ் பாண்டே நேற்று பொறுப்பேற்றார்.
இதற்கு முன், ஜெனரல் மனோஜ் பாண்டே துணை தளபதியாக இருந்தார். இவர் ராணுவத்தின் இன்ஜினீயர்ஸ் படை் பிரிவில் இருந்து ராணுவ தளபதியாக பொறுப்பேற்ற முதல் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ராணுவத்தின் கிழக்கு கட்டுப்பாட்டு மையம், அந்தமான் மற்றும் நிகோபார் கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றிலும் தலைமை அதிகாரியாக பணியாற்றினார்.
தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயிற்சி பெற்ற இவர், 1982-ம்ஆண்டில் ராணுவத்தில் சேர்ந் தார். ஜம்மு காஷ்மீரில், ஆப்ரேஷன் பராகிரம் உட்பட பல முக்கிய நடவடிக்கைகளில் இவர் இன்ஜினீயர்ஸ் படைக்கு தலைமை தாங்கி வழிநடத்தியுள்ளார்.
எல்லைகளில் பாதுகாப்பு சவால்களை இந்தியா சந்தித்து வரும் நிலையில், ஜெனரல் மனோஜ் பாண்டே ராணுவ தளபதி யாக பொறுப் பேற்றுள்ளார். இவர் கடற்படை, விமானப் படையுடன் இணைந்து செயல்படுவார். இந்த திட்டம், மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தால் அமல்படுத்தப்பட்டது.