புனே:
ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் துவக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், கான்வே ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ஐதராபாத் பந்துவீச்சாளர்கள் திணறினர்.
பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக பறக்க விட்ட இந்த ஜோடி, அணியின் ஸ்கோர் 182 என இருந்தபோது பிரிந்தது. ருதுராஜ் 99 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கான்வே ஆட்டமிழக்காமல் 85 ரன்கள் விளாசினார். டோனி 8 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 20 ஓவர் முடிவில் சென்னை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் குவித்தது. இதையடுத்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது.