கேரள மாநிலம் திருச்சூரில் வணிக வளாகம் ஒன்றுக்குள் முரட்டுத்தனமாக நுழைந்த எருமை மாடு ஒன்று அங்கிருந்தவர்களை ஆக்ரோஷமாக துரத்திச்சென்று 3 பேரை முட்டித்தள்ளியதுடன், வாகனங்களையும் சேதப்படுத்திய காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்தன.
சாலையில் மிரண்டு ஓடிக்கொண்டிருந்த எருமை மாடு ஒன்று வழியில் சாலையோரமிருந்த வணிக வளாகத்திற்குள் புகுந்தது. ஆரம்பத்திலேயே ஒருவரை முட்டித்தள்ளி உள்ளே நுழைந்த அந்த எருமை பின்னர் வணிக வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் நபர்களை துரத்திச்சென்றது.
50-க்கும் மேற்பட்ட வாகனங்களை சேதப்படுத்தியதுடன் 3 பேரை முட்டியும் தள்ளியது. காயம் அடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர் காளை மாட்டைப் பிடித்து அதன் கால்களை கட்டி திருச்சூர் நகராட்சி அலுவலகத்திற்கு கூட்டிச்சென்றனர். தொடர்ந்து காளை மாட்டின் உரிமையாளர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.