உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் வைக்கப்பட்டிருந்த 46 ஆயிரம் ஒலி பெருக்கிகள் அகற்றப்பட்டன.
வழிபாட்டுத் தலங்களில் வைக்கப்பட்டுள்ள ஒலி பெருக்கிகளின் சத்தத்தால் இடையூறு ஏற்படுவதாக வந்த புகார்களை அடுத்து அதை முறைப்படுத்தும் வகையில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.
இதையடுத்து மாநிலத்தின் பல்வேறு வழிகாட்டுத் தலங்களில் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 46 ஆயிரம் ஒலி பெருக்கிகளை போலீசார் அகற்றினர். மேலும் 59 ஆயிரம் ஒலி பெருக்கிகளை அனுமதிக்கப்பட்ட டெசிபல் அளவிற்கு குறைத்து ஒலிக்கப்பட்டன.