இயற்கை மீதும், மரங்களின் மீது அன்பு கொண்ட, பசுமை காதலன் என்றழைக்கப்படும் மறைந்த நடிகா் விவேக், மரம் நடுதலை தன் வாழ்நாளில் மிகப்பெரிய பணியாக செய்து வந்தார்.
இவரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அண்மையில் அனுசரிக்கப்பட்டநிலையில், இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலினை, நடிகர் விவேக்கின் மனைவி அருட்செல்வி சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது மறைந்த நடிகர் விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு விவேக் பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அருட்செல்வி அளித்தார்.
இந்நிலையில், “விவேக்” சாலை பெயர் சூட்டப்பட்டு வரும் 3 ஆம் தேதி அதன் பெயர் பலகை திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிற உள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இன்று, சென்னை ஆழ்வார்திருநகரில் ஆயிரம் குடும்பங்களுக்கு ரமலான் பிரிசு வழங்கும் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், அந்த நிகழ்ச்சியில் பேசியபோது இதனை தெரிவித்துள்ளார்.