3 பங்குகளை வாங்கி போடுங்க.. நல்ல லாபம் கொடுக்கலாம்.. நிபுணர்கள் பலே கணிப்பு!

பங்கு சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் பலரிடம் இருந்தாலும், எந்த பங்கினை வாங்குவது என்பதில் தான் பலருக்கும் சந்தேகமே.

பங்கு சந்தையினை பொறுத்தவரையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணிகளை வைத்து பங்குகளை வாங்கி வைப்பர். குறிப்பாக காலத்திற்கு ஏற்ப எந்த துறையை தேர்வு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் நிறுவனம் என்ன செய்கிறது? இதன் தேவை என்ன? இதன் எதிர்காலம் எப்பயிருக்கிறது? எந்த பங்கினில் பணம் போடலாம். வாங்கலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம்? வாருங்கள் பார்க்கலாம்.

சிறு வணிகர்களுக்கு மேலும் பிரச்சனை.. வணிக சிலிண்டர்கள் விலை ரூ.100-க்கு மேல் அதிகரிப்பு!

என்னென்ன பங்குகள்?

என்னென்ன பங்குகள்?

நிபுணர்கள் பரிந்துரை செய்த மூன்று பங்குகளை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

மஹிந்திரா லைஃப்ஸ்பேஷ் டெவலப்பர்ஸ் லிமிடெட்

கேபிஆர் மில் லிமிடெட்

பெர்சிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ்

எவ்வளவு லாபம்?

எவ்வளவு லாபம்?

இதில் மஹிந்திரா லைஃப்பேஸ் டெவலப்பர்ஸ் பங்கானது கடந்த ஒரு வருடத்தில் 129 சதவீதம் லாபம் கொடுத்துள்ளது. பெர்சிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ் பங்கானது 101 சதவீத லாபமும், இதே கேபிஆர் மில் பங்கானது 116 சதவீத ஏற்றமும் கண்டுள்ளது. இதன் காலாண்டு முடிவுகள், வேறு கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? நிபுணர்கள் ஏன் இந்த பங்குகளை வாங்க பரிந்துரை செய்துள்ளனர்.

மஹிந்திரா லைஃப்ஸ்பேஷ் டெவலப்பர்ஸ்
 

மஹிந்திரா லைஃப்ஸ்பேஷ் டெவலப்பர்ஸ்

மஹிந்திரா லைஃப்ஸ்பேஷ் டெவலப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் விற்பனை 328 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த காலாண்டினை விட 31% அதிகரித்தும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 5% அதிகரித்தும் காணப்படுகிறது. இதற்கிடையில் மஹிந்திரா வலுவான ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் இனியும் வளர்ச்சி அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தான் இப்பங்கு விலையானது அதிகரிக்கலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இதன் இலக்கு விலையாக 450 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளனர்.

பெர்சிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ்

பெர்சிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ்

இந்த நிறுவனத்தின் வளர்ச்சி விகிதமானது கடந்த ஆண்டினை காட்டிலும் வருவாய் மேம்பட்டுள்ளது. இன்னும் வளர்ச்சி விகிதமானது மேம்பட்டுள்ளது. இதற்கிடையில் 14 – 14.5 சதவீதம் மார்ஜின் விகிதத்தினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 4வது காலாண்டிலும் எபிடா மார்ஜின் விகிதமும் உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 9- 15% இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல மொத்த ஒப்பந்தங்களின் மதிப்பும் வலுவாக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் தான் இப்பங்கினை வாங்கி வைக்கலாம் என நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.

கேபிஆர் மில் லிமிடெட்

கேபிஆர் மில் லிமிடெட்

தொடர்ந்து கேபிஆர் மில் நிறுவனம் வலுவான வருவாயினை பதிவு செய்து வருகின்றது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் வருவாய் விகிதம், 30% அதிகரித்து, 1449.9 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது ஜவுளி வணிகத்தில் 34% வளர்ச்சியும், சர்க்கரை வணிகத்தில் 13% வணிக வளர்ச்சியும் உள்ளது. இது நூல் மற்றும் துணி ஆடைப் பிரிவுகள் உள்ளிட்ட துறையில் முறையே 16%, 57% வளர்ச்சியினை கண்டுள்ளது.

இலக்கு விலை

இலக்கு விலை

கடந்த 4ம் காலாண்டில் அதன் விற்பனை விகிதம் 38 மில்லியன் பீஸ்களாக இருந்தது. இதே மூன்றாவது காலாண்டில் 28 மில்லியன்களாகவும் இருந்தது. இப்பங்கினையும் நிபுணர்கள் வாங்க பரிந்துரை செய்துள்ளனர். இதன் இலக்கு விலையா 440 ரூபாயினை நிர்ணயம் செய்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

3 Stocks to buy on Monday that zoomed over 100% in one year

3 Stocks to buy on Monday that zoomed over 100% in one year/3 பங்குகளை வாங்கி போடுங்க.. நல்ல லாபம் கொடுக்கலாம்.. நிபுணர்கள் பலே கணிப்பு!

Story first published: Sunday, May 1, 2022, 18:42 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.