Happy Birthday Ajith Kumar , Ajith Kumar Twitter trending – தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்று தனது 51 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதுவரை 60 படங்களில் நடித்துள்ள அஜித்தின் அடுத்த பிளாக்பஸ்டர் AK 61 படத்திற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
அவரது பிறந்தநாளை முன்னிட்டு, ட்விட்டரில் HappyBirthdayAjith, Ak61 போன்ற ஹேஷ்டேக்களை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அவரது பிறந்தநாளை மேலும் ஸ்பெஷல் ஆக்கிட, நலத்திட்ட உதவிகள், ரத்தத்தானம், கோயிலில் சிறப்பு பூஜை, அன்னதானம் போன்றவற்றை ரசிகர்களை செய்வது உண்டு.
சமூக வலைத்தளங்கள் மூலமாக ஏராளமான ரசிகர்களும், பிரபலங்களும் தங்கள் வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்
அந்த வகையில், அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் அஜித்துக்கு ட்விட்டரில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், உழைப்பின் மேன்மையை உலகிற்கு உணர்த்திய மே தின நாளன்று பிறந்து, உழைப்பால் உயர்ந்து, பல கோடி ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட திரைப்பட அஜித்குமாருக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!” என கூறியுள்ளார். ஓபிஎஸ் வாழ்த்து ரசிகர்களிடையேயும், அக்கட்சி வட்டாரத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உழைப்பின் மேன்மையை உலகிற்கு உணர்த்திய மே தின நாளன்று பிறந்து, உழைப்பால் உயர்ந்து, பல கோடி ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட திரைப்பட நடிகர் திரு. அஜித்குமார் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
— O Panneerselvam (@OfficeOfOPS) April 30, 2022
இயக்குநர் வெங்கட்பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா… லவ் யூ என அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Happy bday na!!! Love u always #thala #ak #ajith #ajithkumar
— venkat prabhu (@vp_offl) April 30, 2022
முன்னதாக, அஜித் பிறந்தநாளை முன்னிட்டு அனைவரும் ஒரே மாதிரியாக டிஸ்பிளே பிக்சர் வைக்கவேண்டும் எனவும் போட்டோ ஷேர் செய்திருந்தார்.
I am Overwhelmed to Vouchsafe the AK – 51st birthday’s Common DP from the squad @Thalafansml 🎭🥁
Work hard in Silence Let’s His Success Make Noise – #AJITHKUMAR 👑
Design 🎨 From @madbirdstudio.#MalaysianAKBdayCDP#AK61 || #AK62 || #AjithKumar. pic.twitter.com/6r20DcIOBl
— venkat prabhu (@vp_offl) April 29, 2022
நடிகர் ஹரிஷ் கல்யாண் பிறந்தநாள் வாழ்த்து
Happy Birthday to our dear #Ajithkumar sir. Thank you for being a huge inspiration for all the youngsters. Wishing you more happiness and success.#HBDAjithKumar #AK pic.twitter.com/MzJcnvy41R
— Harish Kalyan (@iamharishkalyan) April 30, 2022
முன்னாள் இந்தியன் கிரிக்கெட்டர் பத்ரிநாத் பிறந்தநாள் வாழ்த்து
Thala Dhoni taking over as CSK skipper again on Thala Ajith’s birthday 😄 What a coincidence. #HBDAjithkumar
— S.Badrinath (@s_badrinath) May 1, 2022