பொது வருங்கால வைப்பு நிதி சேமிப்பு திட்டமானது மிக பிரபலமான அஞ்சலக திட்டங்களில் ஒன்றாகும்.
தற்போதைய நிலவரப்படி இந்த திட்டத்திற்கு 7.10 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக பாதுகாப்பான, சந்தை அபாயம் இல்லாத நம்பிக்கையான திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.
WFH: ஒரு ஊழியருக்கு 8,00,000 சேமிப்பு.. பணமழையில் கார்ப்பரேட் நிறுவனங்கள்..!
முதிர்வு காலம்
இது வரி சேமிப்பு திட்டங்களிலும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதில் கவனிக்க வேண்டிய 7 அம்சங்களை பற்றித் தான் பார்க்க இருக்கிறோம்.
பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். இதனை முதிர்வுக்கு பிறகும் 5 ஆண்டு தொகுப்புகளாக மீண்டும் தொடர்ந்து கொள்ளலாம்.
குறைந்த வட்டியில் கடன்
பிபிஎஃப் திட்டம் என்பது சிறந்த சேமிப்பு திட்டமாக மட்டும் அல்ல, குறைவான வட்டியில் கடன் பெறும் ஒரு ஆப்சனாகவும் பார்க்கப்படுகிறது. அவசர காலகட்டங்களில் குறைந்த வட்டியில் இந்த திட்டத்திற்கு எதிராக, கடன் பெற்றுக் கொள்ள முடியும். இதில் 3 முதல் 6 வருடம் வரையில் பெற்றுக் கொள்ளலாம். இதில் வட்டி விகிதம் வெறும் 1% மட்டுமே. நீங்கள் மற்ற வங்கிக் கடன்களுடன் ஒப்பிடும்போது வட்டி விகிதம் என்பது குறைவு. எளிதில் கிடைக்கும்.
இடையில் பணம் எடுக்கலாமா?
பிபிஎஃப் கணக்கு தொடங்கப்பட்ட ஆண்டில் இருந்து 7வது நிதியாண்டில் உங்களது பிபிஎஃப் கணக்கில் இருந்து ஓரளவு தொகையினை பெறலாம். அவ்வாறு எடுக்கப்படும் தொகையானது ஒரு நிதியாண்டில் ஒரு முறை மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படுகிறது. அதுவும் நடப்பு ஆண்டின் முந்தைய ஆண்டின் நிலுவையில் 50% மட்டும் எடுக்க அனுமதிக்கப்படுகிறது.
நிலையான வருமானம்
பிபிஎஃப் திட்டத்தினை பொறுத்தவரையில் வட்டி வருமானம் என்பது நிரந்தம் தான். ஆனால் வட்டி விகிதம் மாறக்கூடியது. இது காலாண்டுக்கு ஒரு முறை, வட்டி விகிதம் மாறுபடலாம். தற்போதைய நிலவரப்படி வட்டி விகிதம் 7.1 சதவீதமாகும்.
எப்போது டெபாசிட் செய்யணும்?
ஒவ்வொரு மாதமும் 5ம் தேதிக்குள் அக்கவுண்டில் பிபிஎஃப்க்கான தவணைத் தொகையை செலுத்த வேண்டும். வட்டி விகிதமும் ஒவ்வொரு மாதமும் கணக்கிடப்படுகின்றது. எனினும் வட்டி விகிதம் வருட இறுதியில் பிபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகின்றது.
வரி சலுகை
பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் வருமான வரி பிரிவு 80-சியின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரையில், வரி விலக்கு உண்டு. அதேபோல இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் முதிர்வு தொகைக்கு 100% வரி விலக்கு உண்டு.
முன் கூட்டியே முடித்துக் கொள்ளலாமா?
இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 வருடங்களாகும். ஆக முன் கூட்டியேவும் முடித்துக் கொள்ளலாம். இருப்பினும் 5 வருடங்களுக்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் முடித்துக் கொள்ளலாம். எனினும் இது தவிர்க்க முடியாத சில காரணங்களுக்காக மட்டுமே முடித்துக் கொள்ளலாம்.
என்னென்ன காராணங்கள்
பிபிஎஃப் அக்கவுண்ட் ஹோல்டரின் நாமினி அல்லது சார்புடையவர்கள் (குழந்தைகள்) உயிருக்கு ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்டால், அந்த சமயத்தில் பிபிஎஃப்-ல் உள்ள முழுத் தொகையையும் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. அதே அக்கவுண்ட் ஹோல்டருக்கோ அல்லது அவரின் குழந்தைகளுக்கோ உயர் கல்வித் தேவைக்காக பணம் தேவைப்பட்டால், பிபிஎஃப் கணக்கினை மூட அனுமதிக்கப்படுகிறது.
PPF: here are 7 things you should know about PPF
PPF: here are 7 things you should know about PPF/PPF: பொது வருங்கால வைப்பு நிதி.. கவனிக்க வேண்டிய 7 முக்கிய விஷயங்கள்..!