கேரளாவில் அதிவேகமாக பைக்கில் வந்த இளைஞர், சாலை வளைவில் திரும்புகையில் சரிந்து விழுந்து, மின் கம்பத்தில் மோதி உயிரிழந்த சம்பவத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவிக் காட்சிகள் வெளியாகியுள்ளன.
திருவனந்தபுரத்தை சேர்ந்த சஞ்சீவன் என்ற இளைஞர், புனலூரில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி பைக்கில் அதிவேகமாக சென்றுக்கொண்டிருந்தார். அப்போது சுடுகடா என்னும் பகுதியில் சாலையில் வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்த அவரது பைக் நிலைதடுமாறி சரிந்ததில், கீழே விழுந்த இளைஞர், சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி தூக்கி வீசப்பட்டார்.
இதில், தலையில் பலத்த காயமடைந்த சஞ்சீவன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.