அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு அனுப்ப தமிழக அரசுக்கு அனுமதி

இலங்கை மக்களுக்கு தமிழகத்தின் சார்பில் அரிசி, மருந்து, பால் மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப அனுமதியளித்து, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்,கடிதம் அனுப்பியுள்ளார்.

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால், தவிக்கும் மக்களுக்கு உதவிடும் வகையில் முதல்கட்டமாக அரிசி, மருந்து, பால் மா என இந்திய நாணயத்தில் ரூ.123 கோடிக்கு அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு அனுப்ப அனுமதியளிக்கக் கோரி  தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இலங்கை மக்களுக்கு தமிழக அரசின் மனிதாபிமான உதவிகள் குறித்து நாங்கள் இலங்கை அரசை கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வாயிலாக தொடர்பு கொண்டபோது நாடுகளுக்கு இடையிலான உதவிகள் அடிப்படையில் நிவாரணத்தை பெற்றுக்கொள்ள சம்மதித்தது.

இதையடுத்து, நிவாரணப் பொருட்கள் குறித்த விவரங்களை, இந்திய அரசுக்கு தெரிவிக்கும்படி கடந்தஏப்ரல் 29-ம் தேதி தமிழக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட் டுள்ளது.தமிழக அரசு விரும்பினால் இலங்கையில் பொருட்களை விநியோகம் செய்யும் பணிகளை ஒருங்கிணைக்க தலைமைச் செயலாளரை அனுப்பி வைக்கலாம் என்றும் ஜெய்சங்கர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.