Tamil Serial Baakiyalakshmi Rating Update : எப்படியும் பாக்யா அம்மா ஜெயிச்சிடுவாஙகனு தெரியும் இது ஆடியன்ஸ்கே நல்லா தெரியும் அப்படி இருந்தும் அத ஏன் ஒரு வாரத்துக்கு இழுத்துக்கிட்டு போறீங்க சட்டு புட்டுனு முடிச்சிட்டு கோபி மேட்டர்க்கு வாங்க என்று சொல்ல வைக்கிறது பாக்யலட்சுமி சீரியல்.
கட்டிய கணவனே கண் கண்ட தெய்வம் என்று சொன்னது அந்த காலம். கணவனாக இருந்தாலும் கண்மூடித்தனமாக நம்பிவிடாதே என்பது இந்த காலம். இதற்கு சிறந்த உதாரணம் பாக்யலட்சுமி சீரியல். முன்னாள் காதலி ராதிகாவுடன் பழகி வரும் கோபி மனைவிக்கு தெரியாமல், அவளை திருமணம் செய்துகொள்ளும் நிலைக்கு சென்றுவிட்டான்.
இது தெரியாத ராதிகா கோபி சொல்வதை எல்லாம் துளி கூட சந்தேகப்படாமல் அப்படியே நம்பி விடுகிறாள். குடும்ப நல கோர்ட்டுக்கு செல்வது எதற்கு என்று தெரியாத அளவிற்கு பாக்யா கண்மூடித்தனமா கோபியை நம்பி தனது வாழக்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
இதனிடையே ஆசிரமத்திற்கு கொடுத்த சாப்பாட்டால் வந்த வினையில் பாக்யா கோர்ட்டு வரை சென்றுவிட்டு வந்துவிட்டார். இதனால் தனக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரை போக்குவதற்காக ஒரு மணி நேரத்தில் 100 ஐடம் சமைப்பதாக கூறுகிறார். தற்போது இது தொடர்பாக ப்ரமோ வெளியாகியுள்ளது.
இதில் இறுதியாக பாக்யா வென்றுவிட்டார். ஆனால் இடையில் அரைமணி நேரம் ஆகிறது இன்னும் பாதி கூட முடிக்கவில்லை என்று ராதிகாவும், அனைத்தும் முடிந்ததும் 99 ஐடம் தான் இருக்கு என்று நடுவரும் சொல்வது நம்மை கொல்வது போன்று உள்ளது.
நாயகியாக பாக்யா எப்படியும் வெற்றி பெற்று விடுவார் என்று தெரியும் இதற்கு இடையில் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இப்படி எல்லாம் ஒரு பேச்சை கொண்டு வந்து ஏன் இப்படி இழுவையாக இழுத்துக்கொண்டிருக்கிறீர்கள். இந்த சமையல் சீன வந்சே இந்த வாரத்தை கடத்தி விடுவீர்கள.
ஆனால் இந்த சீரிலில் பாக்ய எந்த முயற்சி எடுத்தாலும், அதற்கு முட்டுகட்டை போடும் முடிவில் இருக்கும் கோபி சமையல் வேலைக்கு மட்டும் எப்படி சரி என்று சொன்னார் என்று பாக்யா யோசிக்கவே இல்லை. அப்படி யோசித்திருந்தால் இந்த சீரியல் எப்போதே முடிந்திருக்குமே…
அதேபோல் பாக்ய எந்த முயற்சி எடுத்தாலும், அதற்கு மறுப்பு சொல்லாமல் சப்போர்ட் செய்வது எழில் ரசிகர்கள் மத்தியில் சமத்து பிள்ளை. ஆனால் மூத்த மகன் செழியன் யாரோ எப்படியோ போங்க நான் என் வேலையை பார்ககிறேன் என்ற சுயநலம. மறுபுறம் அம்மாவையே மாற்ற அப்பாவுக்கு ஐடியா கொடுக்கும பாக்யாவின் பெண் வொர்ஸ்ட் கேரக்டர்.
இது எங்கு சென்று முடியுமோ தெரியவில்லை. சீக்கிரமா இந்த சீரியலை முடித்துவிடுங்கள். இல்லை என்றால் சற்று விறுவிறுப்பாக கொண்டு செல்லுங்கள் இயக்குநர் அவர்களே…