டெல்லி: இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் வேலையின்மை விகிதம் 7.60 சதவீதத்தில் இருந்து 7.84 சதவீதமாக உயர்ந்துள்ளது என இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நகர்ப்புறங்களில் வேலை வாய்ப்பின்மை விகிதம் 8.28 சதவீதத்தில் இருந்து 9.22 சதவீதமாக அதிகரித்துள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.