இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் நேற்றும், இன்றும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.
இந்நிலையில், இன்று (02) புதிதாக 3,157 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,82,345 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், கொரோனா தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 23 ஆயிரத்து 869 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 2 ஆயிரத்து 723 பேர் மீண்டுள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 25 இலட்சத்து 8ஆயிரத்து 976 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு தற்போது 19 ஆயிரத்து 500 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் இதுவரை 1,89 கோடியே 23 இலட்சத்து 98 ஆயிரத்து 347 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4இலட்சத்து 02 ஆயிரத்து 170 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 2 இலட்சத்து 95ஆயிரத்து 588 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 83 கோடியே 82 இலட்சத்து 08 ஆயிரத்து 698 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி பேரவை
(ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.