சென்னை: இரசாயனம் இல்லாமல் மாங்காயை பழுக்க வைப்பது சாத்தியமில்லை என கோயம்பேடு வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்கள், பிற மாநிலங்களில் பயன்படுத்தப்படும் முறைகளை அறிந்து அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும். சென்னையில் கொத்தவால்சாவடி உள்ளிட்ட இடங்களில் காய்கறி மொத்த விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
