புதுச்சேரி : புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க., அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் மே தின பொதுக் கூட்டம் லாஸ்பேட்டை உழவர் சந்தை, சுபாஷ் சந்திர போஸ் சிலை அருகில் நடந்தது.அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி தலைமை தாங்கினார். தமிழக முன்னாள் அமைச்சர், தாமோதரன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர் ,வையாபுரி மணிகண்டன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.புதுச்சேரி கிழக்கு மாநில கழக செயலாளர்
அன்பழகன் பேசியதாவது:கூட்டணி கட்சி என்ற அடிப்படையில் அரசின் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டியது எங்களது கடமையாகும். அந்த அடிப்படையில் மேற்கு மாநில தலைவர் மக்களின் நலனுக்காக ஒரு சிலவற்றை எடுத்துரைத்தார்.அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவா, கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க., விமர்சனம் செய்கிறது. அதற்கு என்ன உங்கள் பதில் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.பதவிக்காகவும் சொந்த நலனுக்காகவும் கடந்த ஐந்து ஆண்டு காலம் மவுனம் காத்த தி.மு.க.,விற்கு அ.தி.மு.க.,வை பற்றி விமர்சனம் செய்ய எந்த தகுதியும் கிடையாது.
குறிப்பாக, தொழிற்சாலைகள் சம்பந்தமான வாரியத்திற்கு 5 ஆண்டுகாலம் தலைவர் பதவி வகித்த தி.மு.க., சிவா எத்தனை புதிய தொழிற்சாலையை கொண்டு வந்தார்.ஏற்கனவே இருந்த நுாற்றுக்கணக்கான தொழிற்சாலைகளை மூடியது தவிர இவரது சாதனை என்ன.நாங்கள் கூட்டணியில் இருந்தாலும் அரசு செய்ய வேண்டிய கடமைகளையும் செய்ய தவறியதையும் சுட்டிக்காட்டும் தகுதி அ.தி.மு.க.,விற்கு உண்டு. அதுகுறித்து பேச தி.மு.க.,வினருக்கு எந்த அருகதையும், தகுதியும் இல்லை. புதுச்சேரியில் அ.தி.மு.க., ஆட்சி மலர இந்த மே தினத்தில் நாம் அனைவரும் சபதம் ஏற்போம்.இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement