பிரபலங்கள் பயன்படுத்திய உடைகள், கண்ணாடி, தொப்பி உள்ளிட்ட பொருட்கள் பல கோடி ரூபாய்க்கு
ஏலம்
விடப்படுவதும், ஏலத்தில் கிடைக்கும் தொகையில் பெரும் பங்கு தொண்டு நிறுவனங்களுக்கு கொடையாக வழங்கப்படுவதும் வழக்கம். இந்த நடைமுறையில் இருந்து முற்றிலும் மாறுப்பட்ட வகையிலான ஏலம் ஒன்று இந்த மாத இறுதியில் நடைபெற உள்ளது.
மெக்கலன் நிறுவனத்தின் ஸ்காட்ச் ரக விஸ்கியை கொண்ட பாட்டில் இம்மாதம் 25 ஆம் தேதி ஏலத்துக்கு வருகிறது.
லண்டன்
மாநகரின் எய்டன்பெர்க்கில் உள்ள ல்யான் அண்ட் டார்பிள் என்ற ஏல விடுதியில் இந்த
விஸ்கி பாட்டில்
ஏலத்துக்கு வரவுள்ளது. இந்த பாட்டிலின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் 14 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வித்தியாசமான இந்த ஏலத்தில் கிடைக்கும் தொகையில் 25 சதவீதம் மேரி கியூரி மருத்துவ தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட உள்ளதாக வேல்ஸ் ஆன்லைன் என்ற இணையதள நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகின் மிக உயரமான இயேசு சிலை இதுதான்!
5 அடி 11 அங்குலம் அளவும், 311 லிட்டரும் கொள்ளவும் கொண்ட உலகின் மிகப் பெரிய இந்த விஸ்கி பாட்டில், கடந்த ஆண்டு கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இந்த பாட்டிலில் அடங்கியுள்ள விஸ்கிக்கு ‘தி இண்ட்ரிபிட்’ என பெயரிடப்பட்டுள்ளது.