ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரிர் நேற்று நடைபெற்ற போட்டியில் 13 ஓட்டங்ள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் நேற்று (01) நடைபெற்ற 46வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணியின் துவக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், கான்வே ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்களை குவித்தனர்.
பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக பறக்க விட்ட இவர்கள், அணியின் ஓட்டங்கள் 182 என இருந்தபோது பிரிந்தது.
சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் 99 ஓட்டஙகளில் ஆட்டமிழந்தார். கான்வே ஆட்டமிழக்காமல் 85 ஓட்டங்ளை பெற்றார். அணித்தலைவர் டோனி 8 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
20 ஓவர் முடிவில் சென்னை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 202 ஓட்டங்களை பெற்றது. இதையடுத்து 203 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது.
அந்த அணியின் துவக்க வீரர் அபிஷேக் சர்மா 39 ஓட்டங்களுடனும்அணித்தலைவர் வில்லிம்சன் 47 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். திரிபாதி டக்அவுட்டானார். மார்க்ராம் 17 ஓட்டங்களுடன் வெளியேறினார்.