கணவரை அடித்து விரட்டி விட்டு ரயில் நிலையத்தில் நள்ளிரவில் கர்ப்பிணி கூட்டு பலாத்காரம்: சிறுவன் உட்பட 3 பேர் கைது

திருமலை: ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், வெங்கடாத்ரிபுரம் கிராமத்தை சேர்ந்த கட்டிட ெதாழிலாளி ஒருவர் தனது கர்ப்பிணி மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் கட்டிட வேலைக்காக கிருஷ்ணா மாவட்டம், நாகயலன்கா செல்ல இருந்தனர். இதற்காக, அவர்கள் பாபட்லா மாவட்டம், ரெபள்ளே ரயில் நிலையத்திற்கு நேற்று முன்தினம் நள்ளிரவு வந்தனர். காலையில் செல்ல முடிவு செய்த அவர்கள், ரயில் நிலைய 1வது நடைமேடையில் தூங்கினர். ஆட்கள் யாரும் இல்லை. அப்போது அங்கு மதுபோதையில் 3 பேர் வந்தனர். அவர்கள் திடீரென கணவரை அடித்து விரட்டினர். பின்னர் குழந்தைகள் கண்ணெதிரே ரயில் நிலைய பிளாட்பாரத்திலேயே கர்ப்பிணியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். கணவர் உடனே ரயில்வே போலீசாரை தொடர்பு கொள்ள ரயில்வே காவல் நிலையத்திற்கு ஓடினார். ஆனால், போலீசார் கதவுகளை திறக்கவில்லை. இதையடுத்து, நாகயலன்கா புறநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அங்கு வருவதற்குள் மர்மநபர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச்சென்றனர். உடனே, போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணை நாகயலன்கா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரது கணவரிடம் விவரங்களை சேகரித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். மேலும் இதில் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் ஜெகன்மோகன், பாபட்லா எஸ்பி வகுல்ஜிண்டாவுக்கு உத்தரவிட்டார். அதன்படி நேற்று ரெபள்ளே ரயில் நிலையத்தில் போலீசார் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, கர்ப்பிணியை பலாத்காரம் செய்த நேதாஜி நகரை சேர்ந்த விஜயகிருஷ்ணா(20), பலுச்சுரிநிகில்(25), பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சிறுவன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது திஷா சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.