கர்நாடகாவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட்.. இஸ்ரேல் நிறுவனம் ரூ.22900 கோடி முதலீடு.. எதற்காக தெரியுமா..?!

இந்தியாவின் அடுத்த பெரிய திட்டம், இலக்கு எனப் போற்றப்படும் அளவிற்கு முக்கியத்துவம் பெற்று இருக்கும் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு தொழிற்சாலையை இந்தியாவில் அமைத்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டது.

இதற்காகக் கடந்த 3 மாதமாக இத்துறையில் முன்னோடியாக இருக்கும் பல வெளிநாட்டு நிறுவனத்திடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், முதல் வெளிநாட்டு நிறுவனம் கர்நாடகாவில் மிகப்பெரிய தொகையை முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தியா-வை மாற்றப்போகும் 2 திட்டம்.. டாடா-வின் மாஸ்டர் பிளான்..!

கர்நாடக மாநிலம்

கர்நாடக மாநிலம்

ஐடி சேவை மற்றும் மென்பொருள் ஏற்றுமதியில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக இருக்கும் கர்நாடக மாநிலம், கடந்த சில வருடங்களாகப் பல உற்பத்தி நிறுவனங்களை ஈர்த்துள்ளது. இதில் முக்கியமாக ஐபோன் உற்பத்தியாளரான விஸ்திரான் அடங்கும். தற்போது மிகப்பெரிய ஜாக்பாட் கிடைத்துள்ளது.

ISMC அனலாக் பேப்

ISMC அனலாக் பேப்

இதைத் தொடர்ந்து தற்போது இஸ்ரேல் நாட்டை அடிப்படையாகக் கொண்ட ISMC அனலாக் பேப் (ISMC Analog Fab) பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கர்நாடகாவில் புதிய செமிகண்டக்டர் சிப் தயாரிப்புத் தளத்தை அமைக்க அம்மாநில அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

ரூ.22900 கோடி முதலீடு
 

ரூ.22900 கோடி முதலீடு

இதற்காக ISMC சுமார் 22900 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துக் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை முன்னிலையில் கர்நாடக அரசு சார்பாக ஐபி துறை இணை தலைமைச் செயலாளர் ரமண ரெட்டி , ISMC நிறுவனத்தின் சார்பாகத் தலைவர் அஜய் ஜலன்ஆகியோர் கையெழுத்திட்டனர்.

1500 பேருக்கு வேலைவாய்ப்பு

1500 பேருக்கு வேலைவாய்ப்பு

தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள 22900 கோடி ரூபாய் முதலீடு அடுத்த ஏழு ஆண்டுகளில் செய்யப்பட உள்ளது. இப்புதிய தொழிற்சாலை மூலம் இத்துறையில் பிரிசிஷன் உற்பத்தி டெக்னாலஜி பயன்பாடு இந்தியாவுக்குக் கிடைப்பதோடு 1500 பேருக்கு நேரடியாக வேலை வாய்ப்பும், 10000 மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்க உள்ளது.

ISMC நிறுவனம்

ISMC நிறுவனம்

ISMC நிறுவனம் அபுதாபியின் நெக்ஸ்ட் ஆர்பிட் வென்சர்ஸ் மற்றும் இஸ்ரேல் நாட்டின் டவர் செமிகண்டக்டர் நிறுவனங்களின் கூட்டணியில் உருவானது. இதில் டவர் செமிகண்டக்டர் நிறுவனத்தில் இத்துறையின் முன்னோடியாக இன்டெல் வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் ISMC அனலாக் பேப் நிறுவனம் 2017 முதல் இயங்கி வருகிறது. மேலும் மத்திய அரசின் செமிகண்டக்டர் சிப் உற்பத்தி திட்டத்தில் விண்ணப்பித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Karnataka Govt MoU with Israel ISMC: New Semiconductor fabrication plant set up with Rs22900 crore

Karnataka Govt MoU with Israel ISMC: New Semiconductor fabrication plant set up with Rs22900 crore கர்நாடகாவிற்கு அடித்த மிகப்பெரிய ஜாக்பாட்.. இஸ்ரேல் நிறுவனம் ரூ.22,900 கோடி முதலீடு..!

Story first published: Monday, May 2, 2022, 9:53 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.