மும்பையிலிருந்து மேற்குவங்க மாநிலம் துர்காபூருக்குச் சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானம் காற்றின் வேகத்தில் குலுங்கியதில் 12 பயணிகள் பலத்த காயமடைந்தனர்.
மும்பையில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் வானில் பறந்தபோது காற்றின் வேகத்தில் குலுங்கியதில் பயணிகள் ஒருவர் மீது ஒருவர் மோதிக் கொண்டனர்.
இதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் செய்யப்படுவதாகவும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.