’கிராமசபை கூட்டத்தில் கணக்கு கேட்பதா?’ – மிரட்டுவதாக ஊராட்சி தலைவரின் கணவர் மீது புகார்

கிராமசபை கூட்டத்தில் கணக்கு கேட்பதா? என ஊராட்சி தலைவரின் கணவர் அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறி 100 க்கும் மேற்பட்ட வார்டு உறுப்பினர்களும் பொதுமக்களும்  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் மஜரா ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தில் தலைவரின் கணவர் தலையிட்டு மிரட்டுவதாக உறுப்பினர்கள் பலர் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், கிராம சபை கூட்டம் நேற்று அரசு உத்தரவுப்படி நடைபெற்றபோது வழங்கப்பட்ட வரவு செலவு கணக்குகள் அரசு விதிகளுக்கு புறம்பாக இருந்ததும், சட்ட விதிகளுக்கு முரணாக ஊராட்சி மன்றத்தலைவரும் துணைத்தலைவரும் கூட்டு சதி செய்து தவறான வரவு செலவு பட்டியலை வழங்கியதும் தெரியவந்திருக்கிறது. அதுகுறித்து உறுப்பினர்களும் பொதுமக்களும் கணக்கு கேட்டு கேள்வி எழுப்பியபோது, பஞ்சாயத்து தலைவரின்  கணவர், உறுப்பினரோ பொதுமக்களோ கணக்கு வழக்கு கேட்கக்கூடாது என மிரட்டல் விடுப்பதாகக் கூறியுள்ளனர்.
image
ஏற்கெனவே ஒரு பெண் பஞ்சாயத்து தலைவராக உள்ளபோது அவரது கணவரோ உறவினரோ தலையீடு செய்யக்கூடாது என்ற சட்டத்தை மீறி பஞ்சாயத்து தலைவரின் கணவர் பஞ்சாயத்தை கட்டுக்குள் கொண்டுவருவது இந்த வரவு செலவு கணக்கிலும் தெளிவாகி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். மேலும் கடையாலுருட்டி, கடம்பன் குளம், திருமலாபுரம், வேலப்ப நாடாரூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களை ஊராட்சிமன்றத் தலைவரும் அவரது கணவரும் மிரட்டியதாகவும், இதனை விசாரித்து கணக்கு வழக்குகளை சரிபார்த்து மோசடியை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.