கொரோனா தொற்றால் 13 பேர் பாதிப்பு| Dinamalar

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 13 ஆனது. புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முன்தினம் வரை 12 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் 208 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் ஒருவருக்கு தொற்று உறுதியானது. இவர்களில் புதுச்சேரியில் 3 பேர், ஏனாமில் ஒருவர் குணமடைந்தனர். மீதமுள்ள 9 பேரில் 8 பேர் வீட்டு தனிமையிலும், ஒருவர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெறுகின்றனர். மாநிலத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1,65,790 ஆக உள்ளது. இதில் 1,63,819 பேர் குணமடைந்தனர். இதுவரை 9,64,444 பேருக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது. இதில், 7,02,333 பேருக்கு இரு தவணை தடுப்பூசியும், 20, 607 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.