கோடையின் கோரத்தாண்டவம்… வெயிலில் சுருண்டு விழுந்து 25 பேர் பலி

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஒடிசா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில்
அக்னி நட்சத்திரம்
எனப்படும் கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் முன் எப்போதும் இதுபோல் இருந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு இந்த ஆண்டு
கோடை வெயில்
சுட்டெரித்து வருகிறது. மகாராஷ்டிராவின் மத்திய, வடக்கு பகுதிகள் மற்றும் விதர்பா, மராத்வாடா மாவட்டங்களில் பகல் பொழுதில் 40 முதல் 46 டிகிரி வரை வெப்பம் கொளுத்திக் கொண்டிருக்கிறது.

வெயிலின் உக்கிரம் தாங்க முடியாமல்,
வெப்ப பக்கவாதம்
(Sun Stroke) போன்ற காரணங்களால் மாநிலத்தில் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் அதிகபட்சமாக நாக்பூர் -11, மராத்வாடா -6, ஜல்னா -4 பேர் இறந்துள்ளனர்.

சமீப காலத்தில் மகாராஷ்டிராவில் வெயிலுக்கு இந்த அளவு உயிரிழப்பு நிகழ்ந்ததில்லை என்பதால் அந்த மாநில மக்கள் கோடையை வெயிலை கண்டு நடுங்கிப் போய் உள்ளனர்.

ராஜஸ்தான், ஒடிசா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் அனல் காற்று வீசி வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்த மாநிலங்களில் கோடை வெப்பத்தின் தாக்கம் வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.