தமிழகத்தில் கோடை வெயிலின் வெப்பம் அதிகமாக அதிகமாக இருப்பதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்க முடிவு செய்துள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செவ்வாய்கிழமை கூறினார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது. பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கல்லூரி மற்றும் பல்கலைக்கழக தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைந்ததையடுத்து, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வருகிறாது. இதையடுத்து, நேரடி தேர்வுகளும் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு பள்ளிகளில் பொதுத் தேர்வுகள் கட்டாயமாக நடைபெறும் என்று அறிவித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அதற்கான தேதிகளையும் அறிவித்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் கோடை வெயிலின் வெப்பம் அனல் கக்கி வருகிறது. கோடை வெயில் வெப்பத்தின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. தமிழக்தில் பல மாவட்டங்களில் வெயிலின் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட் தாண்டி கொலுத்தி வருகிறது. வெயில் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வெளியே செல்ல முடியாமல் உள்ளனர்.
தமிழகத்தில் கோடை வெயில் கடுமையாக இருப்பதால், பள்ளி செல்லும் குழந்தைகள் மாணவர்க பாதிக்கபப்ட்டுள்ளனர். இதனால், வெயிலின் வெப்பம் அதிக அளவில் இருப்பதால், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 9 ஆம் வகு வரை உள்ள மாணவர்களை ஆல் பாஸ் செய்ய வேண்டும் என்றும் கோடை விடுமுறையை விரைவில் அறிவிக்க வேண்டும் எனவும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கல் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனால், தமிழக அரசு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு முன்னரே கோடை விடுமுறையை அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
தமிழகத்தில் தற்போது கோடை வெயிலின் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்க முடிவு செய்துள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “தற்போது தமிழகத்தில் கோடை வெயில் அதிகமாக இருப்பதால், விடுமுறை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். மாணவர்கள் நலன் சார்ந்த முடிவு எடுக்கப்பட்டு விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும்.
கோடை வெயில் வெப்பத்தினால் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு சாதகமான பதில் விரைவில் வரும். கொரோனா காலத்தில் பள்ளிகள் அதிக நாட்கள் நடக்காத நிலையில் பாடங்களை மாணவர்களுக்கு நடத்தி முடிக்க முடியாமல் உள்ளது. மேலும், சில மாநிலங்களில் கொரோனா பரவி வரும் நிலையில் மருத்துவ நிபுணர்கள் அறிவுரைப்படி பள்ளிகளை திறப்பதா அல்லது மூடுவதா என்பது குறித்து முடிவெடுக்கப்படும்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“