சென்னை: சென்னையின் முக்கிய சாலையான ராஜீவ் காந்தி சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ.50 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதற்காக ரூ.46 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னையின் முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் ஆகியன ராஜீவ் காந்தி தகவல் தொழில்நுட்ப விரைவு சாலையில்தான் அமைந்துள்ளன. இதன் காரணமாக காலை மற்றும் மாலை வேளையில் கிண்டி சர்தார் படேல் சாலை தொடங்கி மத்திய கைலாஷ் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனால் அந்த நேரங்களில் இச்சாலையைக் கடக்க குறைந்தது 20 நிமிடங்கள் வரை ஆகின்றன.
இதனைக் குறைக்க கிண்டியில் இருந்து செல்லும் வாகனங்கள் மத்திய கைலாஷ் சாலையில் நிற்காமல் செல்லும் வகையில் வழிவகை செய்ய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது. கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், போக்குவரத்து மானியக் கோரிக்கையின் போது, ராஜீவ் காந்தி சாலை மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல் சாலையை இணைக்கும் வகையில் மேம்பலாம் கட்டப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார்.
இதன்படி இந்த மேம்பால கட்டுப்பான பணியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கால் நாட்டி தொடங்கி வைத்தார். இந்த மேம்பாலம் ரூ.46 கோடி செலவில் 2,100 அடி நீளம், 25 அடி அகலத்தில் கட்டப்படுகிறது. இதில் கட்டுமானப் பணிக்கு ரூ.31.44 கோடி, மழைநீர் வடிகால்வாய், நடைபாதை அமைக்க ரூ.5 கோடி, வழிகாட்டி பலகை வைக்க ரூ.40 லட்சம்,சுற்றுச்சுவர் அமைக்க ரூ.35 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பாலமானது இந்த வழித்தடத்தில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் அகியனவற்றை இணைக்கும் வகையில் நகரும் படிக்கட்டுகளுடன் (எஸ்கலேட்டர்கள்) கூடிய மேம்பாலமாக அமைக்கப்படுகிறது.