உலகமே தற்போது கவனித்து வரும் ஒரு முக்கியமான விஷயம் என்றால் அது கட்டாயம் டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றப்போவதும், அதன் பின்பு டிவிட்டரில் கொண்டு வரப்படும் மாற்றங்களும் தான்.
தங்கம் விலையை மீடியம் டெர்மில் நிர்ணயிக்கும் 5 முக்கிய காரணிகள்.. கவனமா இருங்க!
எலான் மஸ்க் திட்டமிட்டு உள்ள மாற்றங்களையும், தனது யோசனைக்கும், எண்ணத்திற்கு இணையான நிர்வாக குழுவையும், உயர் அதிகாரியையும் எலான் மஸ்க் கட்டாயம் கொண்டு வருவார் என்பதை ஏற்கனவே கணித்திருந்த நிலையில் தற்போது டிவிட்டர் சிஇஓ-வான பராக் அகர்வால் இடத்திற்குப் புதிதாக ஒருவரை எலான் மஸ்க் தேர்வு செய்துள்ளதாகவும், அவர் விரைவில் நியமிக்கப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
எலான் மஸ்க் – ட்விட்டர்
எலான் மஸ்க், ட்விட்டருக்கான புதிய தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் முக்கிய பிரிவுகளை நிர்வாகம் செய்ய புதிய அதிகாரிகளைத் தேர்வு செய்துள்ளதாகவும், டிவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் தொகைக்கு முழுமையாகக் கைப்பற்றிய பின்னர் CEO பராக் அகர்வாலுக்குப் பதிலாகப் புதிதாக ஒருவரை நியமிக்க உள்ளதாக தெரிகிறது.
நம்பிக்கை இல்லை
சான் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்ட டிவிட்டர் நிறுவனத்தின் நிர்வாகத்தில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று கடந்த மாதம் ட்விட்டரின் தலைவர் பிரட் டெய்லரிடம் எலான் மஸ்க் வெளிப்படையாகவே கூறியுள்ளார். இத்தகைய நடவடிக்கை இருக்கும் என்று ஏற்கனவே கணிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
பராக் அகர்வால்
2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ட்விட்டரின் தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்ட பராக் அகர்வால் அமெரிக்க நிறுவனத்தை நிர்வாகம் செய்யும் இளம் சிஇஓ என பெருமைக்குச் சொந்தக்காரர். ஆனால் எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கும் வரையில் தான் பராக் அகர்வால் சிஇஓ-வாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
42 மில்லியன் டாலர்
டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றிய 12 மாதங்களுக்குள் பராக் அகர்வால் தனது பணியில் இருந்து நீக்கப்பட்டால், தனது பணி நியமன ஆணையின் படி பராக் அகர்வால் சுமார் 42 மில்லியன் டாலர் அளவிலான தொகையைப் பெறுவார் என Equilar ஏற்கனவே அறிவித்திருந்தது.
ஊழியர்கள் கோபம்
இதேவேளையில் வெள்ளிக்கிழமை ஊழியர்கள் மத்தியில் நடந்த முக்கியமான கூட்டத்தில் எலான் மஸ்க் கைப்பற்றல் மற்றும் அதன் மூலம் ஏற்படும் மாற்றங்கள், பணி உறுதி ஆகியவற்றைக் குறித்து டிவிட்டர் ஊழியர்கள் பராக் அகர்வாலிடம் கோபத்தைக் காட்டினர். இதனால் எலான் மஸ்க் கைப்பற்றலுக்கு முன்பே பராக் அகர்வால் வேறு நிறுவனத்திற்கு மாற அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
Elon Musk planning to replace Twitter CEO Parag Agrawal with new person
Elon Musk planning to replace Twitter CEO Parag Agrawal with new person டிவிட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓ.. எலான் மஸ்க் டிக் செய்த நபர் யார்..?! பராக் அகர்வால் வெளியேற்றமா..?!