டெல்லி அடுத்த நொய்டாவில், மதுபான விடுதியில் அதிக பணம் வசூலிப்பதாக பார் ஊழியர்களுக்கும், இளைஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
இளைஞர்கள் சிலர் மது அருந்திய நிலையில், அவர்களுக்கு 7 ஆயிரத்து 400 ரூபாய் பில் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதிக பணம் கேட்பதாக பார் ஊழியர்களிடம், இளைஞர்கள் முறையிடுவதை சக இளைஞர் வீடியோ எடுக்க முயன்ற போது செல்போன் பிளாஷ் அடித்தது.
இதில் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிய நிலையில் தலையில் அடிபட்டு பிரிஜெஷ் ராய் என்பவர் உயிரிழந்தார். சம்பவத்தின் சிசிடிவியை அடிப்படையாகக் கொண்டு 8 பேரை போலீசார் கைது செய்தனர்.