அட்சய திருதியை பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில், இந்திய மக்களுக்கு மிகவும் சாதகமாகத் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஒருபக்கம் முதலீட்டுச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் எதிரொலியாகத் தங்கம் விலை குறைந்து வருகிறது.
இந்த நிலையில், மறுபுறம் திருமண சீசன், அட்சய திருதியை பண்டிகை ஆகியவற்றின் காரணமாகத் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மே 3 அட்சய திருதியை: தங்கம் வாங்க இதுதான் ‘நல்ல; நேரம்..!
அமெரிக்க முதலீட்டுச் சந்தை
அமெரிக்கக் கருவூல முதலீட்டுப் பத்திரத்தின் லாப அளவுகள் உயர்வும், இந்த வாரம் அறிவிக்கப்படும் வட்டி உயர்வும் தங்கத்தின் மீதான முதலீட்டைப் பெரிய அளவில் குறைத்து தங்கத்தின் விலை திங்களன்று கடுமையாக வீழ்ச்சியடைந்து வருகிறது. இதனால் சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் தேவை குறைந்து தங்கத்தின் மீதான முதலீடும் வெளியேறி வருகிறது.
பெடரல் ரிசர்வ்
அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் அந்நாட்டுப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இந்த வாரம் அதன் அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. இதன் எதிரொலியாக அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைந்தது 0.50 சதவீத வட்டி விகிதம் உயரும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
நாணய கொள்கை
அமெரிக்க மத்திய வங்கியின் பெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டி வட்டி விகிதங்கள் உயர்த்துவது குறித்த இறுதி முடிவுகளை வளர்ச்சி தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இறுதி முடிவை எடுக்கும் இரண்டு நாள் நாணய கொள்கை கூட்டத்தை மே 3 அன்று தொடங்கி அடுத்த நாள் அதன் முடிவை அறிவிக்க உள்ளது.
1878.17 டாலர்
இதன் எதிரொலியாகச் சர்வதேச சந்தையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் 1878.17 டாலர் வரையில் சரிந்துள்ளது. திங்கட்கிழமை வர்த்தகம் துவங்கும் போது 1898 டாலராக இருந்தது.
ஆசிய பங்குச்சந்தை
அமெரிக்காவின் முன்னணி டெக் பங்குகள் அதிகளவிலான சரிவை எதிர்கொண்ட நிலையில், திங்கட்கிழமை ஆசியச் சந்தையில் அதிகளவிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்டு முதலீடுகள் வெளியேறத் துவங்கியது. இதனால் ஒட்டுமொத்த ஆசிய சந்தையும் சரியத் துவங்கியதால் தங்கம் விலை சர்வதேசச் சந்தையில் 1878 டாலர் வரையில் சரிந்தது.
எம்சிஎக்ஸ் சந்தை தங்கம் விலை
இதேபோல் எம்சிஎக்ஸ் சந்தையின் ஜூன் மாத ஆர்டருக்கான தங்கம் விலையைப் பார்க்கும் போது 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 1.51 சதவீதம் சரிந்து 50,970 ரூபாயாக உள்ளது. இதேபோல் ஒரு கிலோ வெள்ளி விலை 1.69 சதவீதம் சரிந்து 63,262 ரூபாயாக குறைந்துள்ளது.
ஸ்பாட் மார்கெட் தங்கம் விலை
மேலும் ஸ்பாட் மார்கெட் சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலை 51249 ரூபாயாக சரிந்துள்ளது. இதேபோல் வெள்ளி விலை 1 கிலோ 62798 ரூபாயாகச் சரிந்துள்ளது. நாளை நாடு முழுவதும் அட்சய திருதியை பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் இந்த சரிவு பெரும் லாபத்தை அளிக்க உள்ளது.
Gold Price today falls sharply; really good time buy gold
Gold Price today falls sharply; really good time buy gold தங்கம் விலை தொடர் சரிவு.. தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்..!