புதுடில்லி: தடுப்பூசி போடுவதற்கு யாரையும் கட்டாயப்படுத்த கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் கோவிட் தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தடுப்பூசி போட
யாரையும்
கட்டாய
படுத்தக்கூடாது
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‛எந்த ஒரு தனி நபரையும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது. சில நிபந்தனைகளை உருவாக்கி அதன் கொள்கைகளை வகுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், அரசியல் சாசனப் பிரிவு 21ன் கீழ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. கோவிட் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு வருவதற்கு அனுமதி இல்லை என்று மாநில அரசு விதித்துள்ள கட்டுப்பாட்டை நீக்க வேண்டும்’ என உத்தரவிட்டனர்.
Advertisement