சென்னை: தமிழகத்தில் இன்று 11 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.
தமிழகத்தில் நாளுக்கு வெயில் அதிகரித்து கொண்டே உள்ளது. இன்றைய தினம் 11 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 107.06 பாரன்ஹீட் ஆக பதிவானது.
சென்னை மீனம்பாக்கம், ஈரோடு, கரூர், மதுரை நகரம், மதுரை விமான நிலையம், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருத்தணி, வேலூர் ஆகிய 11 இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
சென்னையில் 102.56, ஈரோட்டில் 101.84, கரூரில் 103.1, மதுரை நகரத்தில் 101.12, மதுரை விமான நிலையத்தில்104.36, நாமக்கலில் 100.4, சேலத்தில் 100.4, தஞ்சாவூரில்104, திருச்சிராப்பள்ளியில் 103.64, திருத்தணியில் 105.62, வேலூரில் 107.06 பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.