அம்பத்தூர்:
அ. தி.மு.க. தொழிற்சங்க பேரவை சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் புரசைவாக்கம் தானா தெருவில் நடந்தது. அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன், சென்னை ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், நா.பாலகங்கா, டி.ஜி.வெங்கடேஷ்பாபு, ஆதிராஜாராம், தி.நகர் சத்தியா, விருகை வி.என் ரவி, ஆர்.எஸ். ராஜேஷ், எம்.கே.அசோக், ஆகியோர் தலைமையில் நடந்த கூட்டத்தில் அ. தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் அவர் பேசியதாவது:
தி.மு.க. பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து ஒரு வருடம் ஆகியும் இன்று வரை உருப்படியான திட்டம் எதையும் கொண்டு வரவில்லை. பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு புரட்சி தலைவி ஜெயலலிதா ஆயிரம் ரூபாய் திட்டத்தைக் கொண்டு வந்தார்.
அதை திட்டமாக மாற்றி 2016ம் ஆண்டு 8 கிராம் தங்கம் ஆக முயற்சி செய்து வழங்கினார். மகளிர் மகப்பேறுக்காக ரூபாய் 6000 நிதி உதவி வழங்கினார். அதை 12 ஆயிரமாக உயர்த்தினார். ஆனால் ஒராண்டு தி.மு.க. ஆட்சியில் தேர்தலில் அறிவித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. தி.மு.க. ஆட்சியின் மீது பெண்கள் கோபமாக இருக்கிறார்கள்.
இனி எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. தான் வெல்லும். அடுத்து வரும் தேர்தல்களில் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும். அதற்குரிய பணிகளை அ.தி.மு.க. வினர் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக நலிந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் ராயபுரம் மனோ, பி.சந்தான கரு ஷ்ணன், லட்சுமி நாராயணன், ஆர்.பி.புண்ணியகோட்டி, பகுதி செயலாளர்கள் த.மகிழன்பன், முகுந்தன் கோபால், திருமங்கலம் கே.மோகன்,எம்.பி.பரமகுரு, ரஞ்சித் பெர்ணாண்டோ, கே.ராஜேந்தரன், எஸ்.ஏ.அஸ்வின்குமார், கொளத்தூர் முன்னாள் பகுதி செயலாளர் கே.கணேசன், வழக்கறிஞர்பாலாஜி,எஸ்.எஸ்.கே.கோபால்,உட்பட மாவட்ட, பகுதி , வட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.