நாமக்கல்:
கடத்தப்பட்ட 11 வயது சிறுமி மீட்கப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் காளிசெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். சரவணன் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 11 வயதில் ஒரு மகள் உள்ளார். சரவணன் பணிக்குச் சென்ற நிலையில் அவரது மனைவியும் மகளும் நேற்று மொட்டை மாடியில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத சிலர் சரவணனின் மனைவி கவுசல்யா மற்றும் அவரது 11 வயது மகளை மிரட்டி நகைகளைப் பறித்ததாகக் கூறப்படுகிறது.
இருவரையும் கட்டிப்போட்ட அந்த மர்ம நபர்கள் ஆறாம் வகுப்பு படிக்கும் 11 வயது மகளை கடத்தி சென்றுள்ளனர். அதன்பின் சிறுமியின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்புகொண்ட அந்த மர்ம நபர்கள் குழந்தையை விடுவிக்க வேண்டுமென்றால் 50 லட்சம் ரூபாய் தயார் செய்து வைக்கும்படி மிரட்டல் விடுத்ததாகவும் தகவல் வெளியானது. இதனையடுத்து சரவணன்-கௌசல்யா போலீசாரிடம் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இது தொடர்பாக விசாரிக்க 7 தனிப்படைகள் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடத்தப்பட்ட 11 வயது சிறுமி மீட்கப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.