உலகம் முழுவதும் கொண்டாடி வரும் கிரிப்டோகரன்சியைப் பல முன்னணி தொழிலதிபர்களும், பணக்காரர்களும் இன்று வரையில் கடுமையான விமர்சனம் செய்து முதலீடு செய்ய விரும்பாமல் உள்ளனர்.
இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்க மிகவும் தகுதியானவர் என்றால் அது கட்டாயம் வாரன் பபெட் தான்.
1 ஸ்கூட்டர் கூட உற்பத்தி செய்யாத ஹீரோ எலக்ட்ரிக்.. ஏப்ரல் மாசம் ரொம்ப மோசம்..!

பெர்க்ஷயர் ஹாத்வே – வாரன் பபெட்
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 116.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 6 வது இடத்தில் இருக்கும் வாரன் பபெட் தலைமை வகிக்கும் பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் பிட்காயின் மற்றும் இதர கிரிப்டோகரன்சி குறித்துக் கடுமையான விமர்சனம் செய்து பேசியது தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது.

வெறும் 25 டாலர்
பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் வாரன் பபெட் முதலீடு மற்றும் சந்தையின் போக்குக் குறித்துப் பேசினார். அப்போது நீங்கள் உலகத்தில் இருக்கும் அனைத்து பிட்காயின்களையும் நீங்கள் எனக்கும் வெறும் 25 டாலருக்குக் கொடுத்தால் கூட நான் கட்டாயம் அதை வாங்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

விவசாயம் நிலம்
இதற்கு மாறாக ஊருக்கு வெளியில் விவசாயம் நிலமோ அல்லது நகரத்தின் முக்கியப் பகுதிகளில் அப்பார்ட்மென்ட்-ல் தான் நான் முதலீடு செய்வேன். பிட்காயினுக்கு எவ்விதமான மதிப்பும் இல்லை, அதனால் எந்தப் பொருளையும் உற்பத்தி செய்ய முடியாது.

பிட்காயின் விலை
தற்போது பிட்காயினில் முதலீடு செய்துள்ளவர்கள் அனைவரும் வேறு யாராவது அதிகப் பணத்தைக் கொடுத்துப் பிட்காயினை வாங்க தயாராக உள்ளார்களா என்று தான் காத்திருக்கின்றனர். ஆனால் பிட்காயினிடம் ஒரு மேஜிக் உள்ளது, அந்த மேஜிக் மக்களுக்கும் பிடித்துப்போக இன்று மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து இருக்கிறது என வாரன் பபெட் கூறினார்.

சார்லி முங்கர்
வாரன் பபெட்-ன் நீண்ட காலப் பிஸ்னஸ் பார்டனர் ஆன சார்லி முங்கர் இக்கூட்டத்தில் பேசுகையில் “என் வாழ்க்கையில், நான் முட்டாள்தனமான, தீய விஷயங்கள், வேறொருவருடன் ஒப்பிடுகையில் என்னை மோசமாகக் காட்டுகின்ற விஷயங்களைத் தவிர்க்க முயற்சிப்பேன்” “இந்த மூன்றையும் பிட்காயின் செய்கிறது.” எனச் சார்லி முங்கர் கூறினார்.

பிட்காயின் விலை
இன்று ஒரு பிட்காயின் விலை 1.57 சதவீதம் அதிகரித்து 38,543.51 டாலராக உள்ளது. பிட்காயின் மதிப்பு கடந்த 30 நாளில் 17.24 சதவீதமும், 60 நாளில் 11.19 சதவீதமும் சரிந்துள்ளது. 90 நாட்களில் 0.28 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது.
Warren Buffett, Charlie Munger roasted Bitcoin and other cryptocurrency
Warren Buffett, Charlie Munger roasted Bitcoin and other cryptocurrency நீங்க சும்மா கொடுத்த கூட வேண்டாம்.. பிட்காயின் வறுத்தெடுத்து வாரன் பபெட்..!