பறக்க தயாராகிறது அமலாபாலின் பறவை
அமலா பால் சோலோ ஹீரோயினாக நடித்துள்ள படம் அதோ அந்த பறைவை போல. அவருடன் ஆசிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சர் நடித்துள்ளனர். அருண் ராஜகோபாலின் கதையை ஆர்.வினோத் இயக்கி உள்ளார். ஜேக்ஸ் பிஜோய் இசை அமைத்துள்ளார், சி.சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
காட்டுக்குள் மாட்டிக்கொண்ட அமலாபால் தனியொரு பெண்ணாக போராடி எப்படி தப்பிக்கிறார் என்கிற பாரஸ்ட் ஜேர்னி வகை படம். இந்த படம் கொரோனா காலத்துக்கு முன்பே முடிந்து விட்டது. என்றாலும் சில பிரச்சினைகள் காரணமாக வெளிவராமல் இருந்தது. தற்போது வி ஸ்கொயர் எண்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது.
இதுகுறித்து இந்த நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீ விஸ்வநாதன் கூறியதாவது: முதன்முறையாக எங்கள் நிறுவனம் விநியோக துறையில் கால்பதித்துள்ளது. நல்ல மற்றும் தனித்துவமான உள்ளடக்கம் கொண்ட திரைப்படங்களை நாங்கள் விநியோகிப்போம், எங்களின் முதல் திரைப்படமான அமலா பால் நடித்த அதோ அந்த பறவை போல, பார்வையாளர்களாக எங்களை மிகவும் கவர்ந்துள்ளது. குறிப்பாக, இப்படத்தில் நடிகை அமலா பாலின் அர்ப்பணிப்பு பிரமிக்க வைக்கிறது. படத்தின் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். என்றார்.