வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெர்லின்: ஜெர்மனி சென்றுள்ள பிரதமர் மோடியிடம் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிறுவன் ஒருவன் பாட்டு பாடி அசத்தினான். இதனை சொடக்கு போட்டப்படி ரசித்து கேட்ட பிரதமர் மோடி, ‛வாவ்’ என பாராட்டினார்.
ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, டென்மார்க் மற்றும் பிரான்சுக்கு மூன்று நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு (மே 1) டில்லியில் இருந்து புறப்பட்டு இன்று காலை ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள பிராண்டன்பெர்க் விமான நிலையம் சென்றடைந்தார். அவருக்கு அந்நாட்டு அரசின் சார்பில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, பெர்லினில் வசிக்கும் ஜெர்மனி வாழ் இந்தியர்கள் மற்றும் சிறுவர், சிறுமியரை சந்தித்த பிரதமர் மோடி அவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது சிறுமி ஒருவர் தான் வரைந்த பிரதமரின் படத்தை வழங்கினார். அந்த படத்தில் பிரதமர் கையெழுத்திட்டு, சிறுமியை உற்சாகப்படுத்தினார். அதேபோல், சிறுவன் ஒருவன் பிரதமரிடம் ஒரு பாடலை பாடி அசத்தினான். இதனை சொடக்கு போட்டப்படி கேட்டு ரசித்தார் பிரதமர் மோடி, ‛வாவ்’ என சிறுவனை பாராட்டினார். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
Advertisement