நாகை மாவட்டம் வண்டலூர் கிராமத்தில் பாய் வியாபாரம் செய்த இளைஞரை போதையில் தாக்கி தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த விஸ்வநாதன், ஊர் ஊராகச் சென்று பாய் விற்பனை செய்து வரும் நிலையில் நாகையின் வண்டலூர் கிராமத்தில் பாய் விற்பனை செய்ய சென்றுள்ளார்.
அப்போது அவரை போதையில் வழிமறித்த மோகன் என்பவன் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் பாயை 200 ரூபாய்க்கு தரச்சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டு விஸ்வநாதனை தாக்கியதோடு அவரது பைக் மற்றும் பாயை சேதப்படுத்தியுள்ளான்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் பேரில் மோகனை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.