பார்த்திபன் – ரஹ்மான் கூட்டணியில் ‘இரவின் நிழல்’! டீசர் வெளியீடு!

இயக்குநர், நடிகர் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படத்தின் டீசர் வெளியானது. அதில் ரஹ்மானின் இசை ரசிகர்களை ஈர்த்திருக்கிறது.

‘ஒத்த செருப்பு’ படத்திற்கு பிறகு, பார்த்திபன் ‘இரவின் நிழல்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். ‘ஒத்த செருப்பு’ படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே இடம் பெற்றிருந்தைப் போல ‘இரவின் நிழல்’ படம் ‘சிங்கிள் ஷாட்’டில் எடுக்கப்பட்டு உள்ளது.

இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் டீசர் வெளியிடப்பட்டு உள்ளது.

ரஹ்மானின் இசையுடன் தொடங்கும் டீசர் 1.38 நிமிடங்கள் ஓடுகின்றது.

இந்த டீசர் இசை படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்திருக்கிறது.

‘இரவின் நிழல்’ படத்தில் பார்த்திபன், வரலெட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.