பிரெஞ்சு வாழிட உரிம அட்டை தொடர்பில் பிரான்ஸ் அரசு வெளியிட்டுள்ள ஒரு முக்கிய செய்தி



பிரெஞ்சு வாழிட உரிம அட்டை கோரி செய்யப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் இந்த ஆண்டில் டிஜிட்டல் மயமாக்கப்படுவதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு இறுதி வாக்கில், பிரெஞ்சு வாழிட உரிம அட்டை கோரி செய்யப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் ஒன்லைன் வாயிலாக செய்யப்படும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த மாற்றம் non-obligatory residency cards for European citizens, EU long-term residency cards மற்றும் ‘private and family life’ cards ஆகிய அட்டைகளுக்குப் பொருந்துமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இந்த பிரெஞ்சு வாழிட உரிம அட்டைகளுக்காக மக்கள் அலைவதைக் குறைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

பெரும்பாலும், ஒரே ஒரு முறை மட்டுமே மக்கள் இந்த அட்டைக்காக அலுவலகத்துக்குச் செல்ல நேரிடும். அதாவது, தயாரான பிரெஞ்சு வாழிட உரிம அட்டையை பெற்றுக்கொள்வதற்காக…

ஒருவேளை விண்ணப்பதாரர் தனது கைரேகைகளை ஸ்கேன் செய்யாமல் விட்டிருந்தால் இரண்டு முறை செல்ல நேரிடலாம்.

அத்துடன், பிரெஞ்சு வாழிட உரிம அட்டை பெறுவதற்குத் தேவையான ஆவணங்களின் எண்ணிக்கையையும் குறைக்க அரசு திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.