‘பீஸ்ட்’ படத்தின் ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ’பீஸ்ட்’ சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இப்படத்தின், ‘ஹலமதி’ மற்றும் ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல் வைரல் ஹிட் அடித்தன. ‘ஹலமதி’ பாடல் உலகளவில் ஹிட் அடித்து யூடியூபில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தினாலும், ‘ஜாலியோ ஜிம்கானா’ விஜய் ரசிகர்களை எப்போதும் ஜாலி மூடில் வைத்திருக்கும் பாடல். காரணம், கு கார்திக் எழுதியுள்ள இப்பாடலை செம்ம ஜாலியாக பாடியவர் உங்கள் விஜய். ‘மாஸ்டர்’ படத்தின் ’குட்டி ஸ்டோரி’ போலவே வாழ்க்கையை ஜாலியாக வாழவேண்டும் என்பதை உணர்த்தும் பாடல்.
இப்படத்தின், முதல் பாடலான ‘ஹலமதி ஹபிபோ’ பாடல் வீடியோ இன்னும் வெளியாகவில்லை. ஆனால், முதல் பாடலாக ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடலை தற்போது வெளியிட்டு ரசிகர்களை ‘பீஸ்ட்’ மோடுக்கு கொண்டுவந்துள்ளது தயாரிப்பு நிறுவனம். பாடலில் ப்ரோமோவில் காட்டியதுபோலவே, விஜய்யுடன் நெல்சன் திலீப்குமார், அனிருத், நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் உள்ளிட்டோர் உற்சாகமுடன் நடனம் ஆடுகிறார்கள். பாடல் வெளியான சிலமணி நேரங்களிலேயே 7 மில்லியன் பார்வைகளையும் 1 லட்சம் லைக்ஸ்களையும் யூடியூபில் குவித்துள்ளது.