திருப்பதி மலையில் பொம்மைகள் விற்று வியாபாரம் செய்து பிழைத்து வரும் தம்பதியின் 5 வயது குழந்தையை கடத்திச்சென்ற பெண்ணை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருப்பதி அருகே தாமிநேடு பகுதியை சேர்ந்த வெங்கட ரமணா – சுவாதி தம்பதியர் திருமலையில் நேற்று மாலையில் வழக்கம்போல பக்தர்களுக்கு வியாபாரம் செய்து வந்தனர். உடன் தம்பதியின் 5 வயது மகன் கோவர்தனும் இருந்துள்ளான். 6 மணிக்கு மேல் திடீரென மகன் காணாமல் போனதையடுத்து, அந்த தம்பதியர் திருமலை போலீசில் புகார் அளித்தனர்.
இதையடுத்து திருமலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது அதில் முதுகில் பேக் மாட்டிக் கொண்டு, சுடிதார் அணிந்திருந்த மொட்டையடித்த பெண் ஒருவர், சிறுவன் கோவர்த்தனை கையை பிடித்து கூட்டிச்சென்று, பேருந்தில் ஏற்றி அழைத்துச்சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.